fbpx

கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை…! விண்ணப்பிக்க இறுதி நாள்…‌

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள விவரத்தில்; தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக மாணவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

மேலும், நேற்று மாலை வரை 3,55,968 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 2,93,327 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதில், 2,60,643 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பதிவு செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்” என அவர் தெரிவித்தார்.

Vignesh

Next Post

கவனம்..! இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம்...

Thu Jul 7 , 2022
இன்றைய உலகில் மரணத்திற்கு இதய நோய்களே மிகப் பெரிய காரணம். இந்த வழக்கில், இதய நோய்க்கான மிக அதிக ஆபத்து உள்ள சில இரத்த வகைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. உலகம் முழுவதும் இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நோய்களுக்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சில மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் […]

You May Like