fbpx

வெடி விபத்தில் 3 பேர் பலி.. தென்காசியில் கிணறு தோண்டும் போது நடந்த சோகம்..

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்..

தென்காசி அருகே ஆலங்களம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் இன்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.. இதில் ஆணையபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அப்போது கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததன் காரணமாக, 2 பேர் உயிரிழந்தனர்.. அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆசீர் சாம்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்..

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்நிலையில் ராஜலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிணறு தோண்ட அனுமதி பெற்றுள்ளனரா, கிணறு தோண்டுவதற்கான விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்..

Maha

Next Post

விழுப்புரம் ஆசிரமத்தில் நீடிக்கும் மர்மம்…..! தொடரும் கைது நடவடிக்கை….!

Thu Feb 16 , 2023
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த […]

You May Like