ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்த 69 பேர் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் அக்னூரில் உள்ள சுங்கி மோர் பகுதியில் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் ஹத்ராஸிலிருந்து (உ.பி) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையை விட்டு விலகிச் சென்றது. அக்னூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, காயமடைந்த 69 பேர் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அக்னூர் மருத்துவமனையின் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது 21 இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் 69 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர். பலத்த காயமடைந்தவர்களில் சிலர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.