fbpx

அடி தூள்…! தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை…! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!

தமிழ் நாடு அரசின் 2023-24 க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் தொடக்கமாக, 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023- ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிக்கையைப் பார்த்து, நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செக்...! உரிமம் பெறாத இடத்தில் மது விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Thu Aug 10 , 2023
உரிமம் பெறாத இடங்களில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் தனது உத்தரவில்; மதுபானங்களை விற்பனை செய்ய, தமிழக அரசால், விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு உரிமம் பெறாமல், உணவகங்கள், தாபா போன்ற சிறுகடைகள் மற்றும் உரிமம் பெறாத வேறு இடங்களில், மதுபானம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். மீறி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். […]

You May Like