fbpx

தமிழக அரசு சார்பில் ரூபாய்‌ 3 இலட்சம்‌ நிதி உதவி… குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும்….!

தருமபுரி மாவட்டத்தில்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காகவும்‌, மாறி வரும்‌ சூழலுக்கு ஏற்பவும்‌, நவீனசலவையகங்கள்‌ அமைத்திட மேற்கண்ட இன மக்களில்‌ சலவைதொழில்‌ தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அமைத்து ரூபாய்‌ 3 இலட்சம்‌ நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தகுதிகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ பின்வருமாறு

1.குழு உறுப்பினாகளின்‌ குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்‌ (விண்ணப்பிக்கும்‌ நாளில்‌)

2. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ மூலம்‌ பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட‌ குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ .

3. 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல்‌ வேண்டும்‌.

4. குழு உறுப்பினர்கள்‌ சீர்மரபினர்‌ இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌.

5. குழுவிலுள்ள பயனாளிகளின்‌ ஆண்டு வருமானம்‌ ரூபாய்‌ ஒரு இலட்சத்திற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விருப்பமும்‌, தகுதியும்‌ உடைய மேற்கண்ட இனத்தைச்‌ சார்ந்த குழுவினர்‌ உடன்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிடத்தில்‌ முதல்‌ தளத்தில்‌ இயங்கி வரும்‌ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பித்து நிதி உதவி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

#Bank Job Alert: SBI வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!

Mon Sep 12 , 2022
இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Deputy Chief Technology Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் Deputy Chief Technology Officer பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு […]

You May Like