ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சாந்தா என்ற கட்டிடத் தொழிலாளி. இவர் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
கடந்த 1ம் தேதி அன்று இரவு வார சந்தை வளாகத்திலேயே எப்போதும் போல் தூங்கி கொண்டு இருந்தார் சாந்தா. மறுநாள் காலை சென்று பார்த்தபோது முகம் மற்றும் தலைகளில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு கொலையாளிகளை தேடி வந்த நிலையில், பூவம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் சரணடைந்து உள்ளார். பின்னர் அவரின் வாக்குமூலத்தின் படி ஆறுமுகம் மற்றும் கோபி என்ற இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் அன்று இரவில் மூன்று பேரும் மது குடித்து போதையில் சந்தைப்பேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் அங்கே தூங்கிக் கொண்டிருந்த சாந்தாவை எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்து வற்புறுத்தி இருக்கின்றனர். வர மறுத்ததால் அவரை ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். மேலும் உடனே அங்கிருந்து தப்பி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.