கர்நாடக மாநிலம் கோலார்மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 3 பேர் காவல் நிலையத்திலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில்உள்ள கவுனி பள்ளி காவல்நிலையத்தில் காவலர்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் நேற்று காவல் நிலையத்தில் இருந்தபோதே மது அருந்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவல்நிலையத்தில் பணியின் போதே மதுக்கடையாக மாற்றியுள்ள காவலர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே இவர்கள் மூன்று பேரையும் உயரதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் மற்ற காவல்நிலையங்களுக்கும் இது போன்ற செயல்களின் காவலர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பபட்டது. காவல்நிலையத்தை மது பாராக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.