இலங்கையில் இருந்து தப்பித்து சென்றபோது பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் 306 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இலங்கையைச் சேர்ந்த 306 பேர் கப்பலில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் –வியட்நாம் இடையே நள்ளிரவு கப்பலின் அடிப்பகுதி சேதமடைந்து அபாய கட்டத்தில் இருந்துள்ளது.
இதையடுத்து அதில் சிலர் இலங்கை கடற்படைக்கு தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தனர். ’’நாங்கள் வந்த கப்பல் மூழ்கும் தருவாயில் உள்ளது. எங்களுக்கு உதவியளிக்க வேண்டும். ’’ என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர், பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சொந்தமான கடற்படையை தொடர்பு கொண்டு 306 பேரை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சிங்கப்பூர் கடற்படையினர் மாற்று கப்பலில் 306 பேரை வியட்நாம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வியட்நாம் சென்றடைந்த பின்னரே அவர்களிடம் விசாரணை நடத்தி உண்மையிலேயே அவர்கள் இலங்கைதானா? என விசாரிக்கப்படுவார்கள். பின்னர் யார் யார் சென்றார்கள் அவர்கள் முழுவிவரம் பற்றிய அனைத்து தகவலும் தெரியவரும்.
இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தம் கூறுகையில், ’’ எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 306 பேர் வியட்நாம்-பிலிப்பைன்ஸ் இடையே சிக்கிக் கொண்டனர். எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் சிங்கப்பூர் கடற்படையை தொடர்பு கொண்டோம். அவர்கள் பாதுகாப்பாக தற்போது வியட்நாம் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அவர்களிடம் இருந்து அடுத்த கட்ட தகவல் தெரிவிக்கப்படும்’’ என்றார்.