fbpx

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி…!

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி; 2016 – 2017 நிதியாண்டில் 690 கோடியே 59 லட்சம் ரூபாயும், 2017 -2018 நிதியாண்டில் 848 கோடியே 48 லட்சம் ரூபாயும், 2018 -2019 நிதியாண்டில் 502 கோடியே 79 லட்சம் ரூபாயும், 2019 -2020 நிதியாண்டில் 487 கோடியே 52 லட்சம் ரூபாயும், 2020 – 2021 நிதியாண்டில் 78 கோடியே 62 லட்சம் ரூபாயும், 2021 – 2022 நிதியாண்டில் 928 கோடியே 92 லட்சம் ரூபாயும் மத்திய அரசின் பங்காக தமிழ்நாட்டிற்கு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார பிரிவுவாரி கணக்கெடுப்பு 2011-ன்படி தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 3,71,382 சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 4,45,459 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 18,63,373 கூரை மட்டும் உள்ள வீடுகள் என மொத்தம் 26 லட்சத்து 80 ஆயிரத்து 214 குடிசை வீடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதே போல் புதுச்சேரியில் 9,655 சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 12,499 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 37,534 கூரை மட்டும் உள்ள வீடுகளும் என மொத்தம் 59,688 குடிசை வீடுகள் உள்ளதாக கூறினார் ‌

Vignesh

Next Post

சைலண்ட் ஹார்ட் அட்டாக்: சோர்வு முதல் குமட்டல் வரை..! இருதயநோய் நிபுணர் பகிர்ந்த 5 அறிகுறிகள்...

Thu Dec 14 , 2023
மாரடைப்பு மற்றும் அதன் அறிகுறிகளை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், பல நேரங்களில் மாரடைப்பு நாம் அடையாளம் காணாத அறிகுறிகளில் வரலாம். சில நேரங்களில் விவரிக்க முடியாத சோர்வு, வேலை அழுத்தம் காரணமாக இருக்கலாம், மற்ற நேரங்களில் இது குமட்டல் போன்ற இரைப்பை அறிகுறிகளைக் காட்டலாம். நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் இல்லாத நிலையில், மாரடைப்பு நிகழ்வுகளில் கிட்டத்தட்ட பாதி ‘அமைதியாக’ இருக்கின்றன. அமைதியான மாரடைப்பு உங்கள் இதயத்திற்கு பாதிப்பை […]

You May Like