fbpx

“என் மனைவி படுக்கையிலேயே…” சென்னை பிரபல ஹோட்டல் பிரியாணியால் வந்த வினை.! உரிமையாளரின் அலட்சிய பேச்சு.!

சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை பிரபல ஹோட்டலுக்கு கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இருக்கிறார். மேலும் ரஞ்சித் என்பவர் தனது மனைவிக்காக பிரியாணி மற்றும் சிக்கன் பார்சல் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நான்கு பேருக்கும் பிரியாணி மற்றும் சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்ணீர் குடித்தாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் என்பவரின் மனைவி படுக்கையிலேயே மலம் கழித்ததாகவும் அதிர்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த உறவினர்கள் சென்னை பிலால் தலப்பாக்கட்டி ஹோட்டலில் சென்று முறையிட்டதாகவும் அதற்கு அந்த ஹோட்டலின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் முதலில் சுகாதார குறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் தாங்கள் புகார் அளித்த பிறகு ஹோட்டலில் அனைத்து செட்டிங்கையும் மாற்றி வைத்திருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் மின்சார ரயில்கள் ரத்து..!! 15 நாட்களுக்கு இயங்காது..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Tue Nov 28 , 2023
சென்னையில் மின்சார ரயில்கள் புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. புறநகர் பகுதிகளில் இருந்து பள்ளி-கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என லட்சக்கணக்கானோர் சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ரயில்கள் நாளை முதல் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் […]

You May Like