fbpx

தமிழகத்தில் உள்ள 41 கலை அறிவியல் கல்லூரிகள்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசுஅரசாணை வெளியிட்டது.

சென்னை, தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வந்த 41 கல்லூரிகள் நேரடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய 10,000 கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இணை இயக்குநர் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

குரூப்-B மற்றும் குரூப் - C காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியீடு..‌.!

Fri Sep 23 , 2022
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022-க்கான அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சட்ட ரீதியிலான, சட்டபூர்வ ரீதியிலான அமைப்புகள், தீர்ப்பாயங்களில் குரூப்-பி மற்றும் குரூப் –சி காலிபணியிடங்களை நிரப்புவதற்காக வெளிப்படையான வகையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. பணி விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், […]
நெருங்கும் தேர்வு முடிவுகள்..!! குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? உங்கள் சந்தேகத்திற்கு பதில் இங்கே..!!

You May Like