fbpx

Court: 5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகவேண்டும்!… சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

Court: மணல் குவாரி சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சம்மனுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் மணல்குவாரிகளில், அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகள் மூலம் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இநத சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியமாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்கள் நீர்வளத்துறை செயலாளர். பொதுப்பணித்துறை செய்லாளர் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது,

‘சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செயய்ப்பட்டது. இந்த மனுவை விவாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டுமா? அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு இன்று மீண்டும் விவாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பேலா எம்.திரிவேதி, நீதிபதி பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தாக்கல் செய்த மனு விசித்திரமானது மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின்படி, வேலூர், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தற்போது அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

Annamalai | ’பிரதமர் இல்லையென்றால் ஜல்லிக்கட்டு கிடையாது’..!! அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!

Wed Feb 28 , 2024
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரையின் நிறைவு விழா நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் […]

You May Like