Terrorists: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பட்டல் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே வெள்ளிக்கிழமை நடந்த கண்ணிவெடி வெடிப்பில் ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் ஒருவர் தவறுதலாக இந்தியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் காலடி வைத்ததால் வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகள் கண்ணிவெடியை எடுத்துச் சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட வெடிப்பு கூடுதல் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர், மேலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அந்தப் பகுடியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக மேலும் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Readmore: ரஷ்யா-உக்ரைன் போரில் புதிய திருப்பம்!. வட கொரிய இராணுவ வீரர்கள் மாயம்!. என்ன காரணம்!