fbpx

2026 தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் 5 முக்கிய இளம் அரசியல்வாதிகள்..!! விஜய்க்கு யாரால் சிக்கல்..?

மக்கள் சேவை, சமூகநலம், தொலைநோக்கு பார்வை என பலவற்றைக் காரணம் காட்டி நம் தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டனர். இன்றைய நடைமுறையில் காலத்தின் கட்டாயமாகவே அரசியலில் நுழைந்து வெற்றி வாகைசூட போராடி வருகின்றனர் நம் இளம் தலைமுறை தலைவர்கள். அந்த வகையில், 2026 தேர்தலில் களம் காண உள்ள இளம் தலைவர்களை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

உதயநிதி ஸ்டாலின் : முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பின் பழம் பெரும் திராவிட கட்சியான திமுக மொத்தமும் உதயநிதி ஸ்டாலினையே நம்பியுள்ளது. 46 வயதான உதயநிதி ஸ்டாலின், தற்போது விளையாட்டு அமைச்சராக இருக்கிறார். 2026 தேர்தலில் வெற்றி பெறுவதை அடுத்து முதல்வர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அண்ணாமலை : இப்போது இருக்கும் முன்னணி அரசியல்வாதிகளில் 39 வயது என மிகக் குறைந்த வயது உடையவர் பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் அண்ணாமலை படத்தில் ரஜினி ஒரே பாடலில் முன்னேறியது போல் தமிழக அரசியலில் கடகடவென முன்னேறி வருகிறார். முட்டாள் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிரடி பேச்சுக்களால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் இவர், 2021 சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து வெறி கொண்ட வேங்கையாக 2026 சட்டசபை தேர்தலை எதிர் நோக்க உள்ளார்.

சீமான் : சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன 57 வயது நிறைந்த சீமான், எந்த ஒரு கூட்டணியுடன் சேராது தனக்கென ஒரு தனி வழியை அமைத்து முதல்வர் ஆகிய தீர வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார். இதற்காக தற்போது இவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள எல்ஐசி திரைப்படம். விவசாயத்தை பேசி மக்களின் மனதை ஜெயிக்கப் போகிறாராம்.

அன்புமணி ராமதாஸ் : தமிழ்நாட்டில் 56 ஆண்டுகள் இரு கட்சிகளை மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. நாம் கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்னும் ஆட்சி கட்டிலில் அமர முடியாதது ஏன் என்று தீவிர ஆலோசனை செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ்.

விஜய் : சாணக்கியன் போல் பல வருடம் திட்டம் போட்டு ஒரு வழியாக 49 வயதில் கட்சியை ஆரம்பித்து விட்டார் தளபதி விஜய். தமிழக வெற்றி கழகமாக உருவெடுத்து இருக்கும் விஜய்யின் மக்கள் இயக்கம், 2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக களம் இறங்க உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை உதயநிதி வாழ்த்தி இருந்தாலும் விஜய்க்கு பலமான நெருக்கடியை உதயநிதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

"மதுர பளப்பளக்குது.. விஜய் கட்சி போஸ்ட்டர்.."! - மதுரையில் விஜய்யின் TVK கட்சி போஸ்ட்டர்.!

Sat Feb 3 , 2024
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஒரு வருடமாகவே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் அதற்கான பதிலை நேற்று கட்சியின் பெயருடன் சேர்த்து வழங்கி இருக்கிறார் தளபதி விஜய். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக […]

You May Like