fbpx

வரும் 15-ம் தேதி வரை எல்லாம் உஷாரா இருங்க… 65 கி.மீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 15-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 15-ம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Also Read: TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்…! அரசு அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

இப்படியே போனால் மிகவும் ஆபத்து... மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...! முதல்வர் உத்தரவு

Tue Jul 12 , 2022
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி லக்னோவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை ‘மக்கள்தொகை நிலைத்தன்மை பங்க்வாடா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும், ஆனால் அதே நேரத்தில், ‘மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு’ ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் கூறினார். “ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மக்கள் தொகை அதிவேகமாக வளரக்கூடாது. இது நடந்தால், பூர்வீக குடியிருப்பாளர்களின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும், […]

You May Like