நடிகர் விஜய், தனது கட்சி பெயர், கொடி அறிமுகம் உள்ளிட்டவற்றை நடத்தி முடித்தபிறகு, தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் தவெக-வின் கொள்கை, அரசியல் மற்றும் சித்தாந்த எதிரிகள் உள்ளிட்டவற்றை அதிரடியாக அறிவித்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் வருகை தந்திருந்தனர். அதே சமயம், மாநாட்டிற்கு வரும்போதும், வீடு திரும்பிய போதும் எதிர்பார விபத்துகளில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி, சாலை விபத்துகளில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு விஜய் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை தவெக தலைவர் விஜய் வழங்கினார். மேலும், இறந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் விஜய் ஏற்றுள்ளார்.
Read More : அடேங்கப்பா..!! ஒரே நாளில் ரூ.16,000 குறைந்தது..!! நகைக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்..!!