fbpx

ஒரே மாதிரி 60+ குழந்தைகள்!… ஃபேஸ்புக்கில் போலி பெயரில் விந்தணு தானம்!… ஆஸ்திரேலியாவின் தாராள பிரபு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி, ஃபேஸ்புக்கில் போலி பெயர்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட தன்பான் பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்துவரும் நவீன காலத்திற்கேற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. மேலும் தற்போதைய தம்பதிகள் பலரிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. மேலும் சிலருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனும் இல்லாமல் போய்விடுகிறது.

அந்த வகையில் சில பெண்களின் ஆண் துணைக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிப்பு மையத்தை நாடி வருகின்றனர். அவர்கள் வேறொருவரிடம் இருந்து விந்தணுவைதானம் பெற்று அதன் மூலம் கருத்தரிக்க செய்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதற்கு ஆங்காங்கே புதிது புதிதாகத் தொடங்கப்படும் கருத்தரிப்பு மையங்களே சான்றாக உள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சமீபத்தில் தன்பாலின பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு அனைத்து குழந்தைகளும் ஒரே போல இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் சந்தேகமடைந்து கருத்தரிப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரே நபர், அனைத்து இடங்களிலும் விந்தணுக்களை தானம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் சிட்னியில் மட்டுமே தனது விந்தணுவை அதிகாரப்பூர்வமாக தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், போலி பெயர்களைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் சட்டவிரோதமாக அவர் பல இடங்களில் தனது விந்தணுக்களை விற்றுள்ளார். அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் தெரியவில்லை. பல போலி பெயர்களைப் பயன்படுத்தி, விதிகளை மீறி அவர் பல தன்பாலின பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது

Kokila

Next Post

ராணுவ வீரர் படுகொலை சம்பவம்...! ஆளுநர் ரவியை சந்தித்த முன்னாள் ராணுவ வீரர்கள்...!

Wed Feb 22 , 2023
ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி […]

You May Like