கரூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேகநாதன். 63 வயதான இவர் உடல்நிலை சரி இல்லாத மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்திருக்கிறது. அந்த வீட்டிலிருந்து சிறுமியை தனது வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்திருக்கிறார் மேகநாதன். அப்போது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப் பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார் .
இதனைத் தொடர்ந்து அந்த குடும்பம் மேகநாதன் வீட்டை காலி செய்து விட்டு வேறொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். எனினும் பள்ளிக்கு சென்ற சிறுமியை வழிமறித்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்திருக்கிறார் மேகநாதன் . இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவருக்கு எதிராக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மேக நாதனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர் . இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மேகநாதனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. திருமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 4 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி வலியுறுத்தி இருக்கிறார்.