தென்காசி அருகே 65 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 72 வயது முதியவரை கைது செய்துள்ளனர். தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி(65). கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் தனது வீட்டின் அருகே ஆடைகள் இன்றி சடலமாக மீட்கப்பட்டார் மூதாட்டி. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினார்.
காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 72 வயது நபரை பிடித்து விசாரித்ததில் முப்புடாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனிமையில் இருந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.