டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத்திருட்டு வழக்கில் தொர்புடைய 4-வது குற்றவாளியையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பர்கஞ்ச் பகுதியில் டெலிவரிசெய்யும் நபராக வேலை பார்த்து வருபவர் சோம்வீர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அவர், நகைகளுடன் சென்றிருக்கின்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் போலீஸ் உடையில் இருந்துள்ளார். ஆவணங்களை காட்டுமாறும் , பையை சோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.இதனால் பையை காண்பித்துள்ளார். அப்போது அங்கிருந்த மேலும் இரண்டு பேர் அந்த நபருடன் சேர்ந்துகொண்டு மிளகாய்பொடியை தூவிவிட்டு பையை பிடுங்கிச் சென்றனர். அந்த பையில்தங்கம் , வைர நகைகள் என ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் இருந்தது. இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தனர். சுமார் 700க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 3 பேர் குறித்து விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் ஒரு வாடகை கார் ஓட்டுனரிடம் ஏதோ பேசியது சி.சி.டி.வியில் தெரியவந்தது.
சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு அந்த கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வாடகை காரில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கான பணம் ரூ.100 ஐ அவர்கள் பே.டி.எம்.செயலிமூலம் டிரைவருக்கு அனுப்பியுள்ளனர். இதை வைத்து போலீசார் அவர்களை ட்ராக் செய்தபோது குற்றவாளிகள் ஜெய்பூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் நாகேஷ்குமார் (28). சிவம் (22), மற்றும் மணிஷ் (23) என்பது தெரியவந்தது. இது குறித்து 3 மாநிலங்களில் போலீஸ் தேடுதல் வேட்டை நடத்தியது.
அவர்களை வலைவீசித் தேடிய போலீசார் 3 பேரை ஏற்கனவே பிடித்து சிறையில் அடைத்தனர். அதில் ஒருவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். கடந்த ஒரு வாரமாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த 4 வது நபரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபரிடம் இருந்து அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.