fbpx

இந்த மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ர தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும். சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இந்த மாவட்டத்திற்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!

இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடி ஏற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். இதன் காரணமாக நாளை மறுநாள் 6ஆம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

இளைஞர்களே உஷார்..!! உடல் எடையை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

Wed Jan 4 , 2023
உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (20). இவர், தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழில் செய்பவர். இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை நாடியுள்ளார். தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி […]

You May Like