கோவையை அடுத்துள்ள எஸ் எஸ் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51) ரியல் எஸ்டேட் அதிபர் ஆன இவர் நேற்று முன்தினம் இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பதற்கு பணம் கொடுப்பதற்காக 70 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது அவிநாசி சாலை சிட்ரா அருகே வருகை தந்துள்ளார் இந்த நிலையில் கண்ணன் வருவதற்கு தாமதமாகும் என்பதால் காரை அன்னபூர்ணா என்ற உணவகத்தின் நிறுத்திவிட்டு இரவு உணவை சாப்பிடுவதற்காக சென்றார்.
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.
ஆகவே அவர் இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொறுத்துக் கொண்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கார் கண்ணாடி உடைத்து பணத்தை திருடி சென்ற நபர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.