யாழ்ப்பாணம், மானிப்பாய் போலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 72 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதே பகுதியில் உள்ள பொதுக்கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்குவதற்காக குறித்த சிறுமியானவல் யாருடன் துணையும் இன்றி தனியாக வந்துள்ளார்.
தனியாக வந்த சிறுமியை கடையில் இருக்கும் 72 வயது முதியவர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தில் கடைக்குள் சிறுமியை உள்ளே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, சிறுமி அலரி சத்தம் போடவே, அதனை கேட்டு அந்த வழியாக சென்ற வாலிபர் கடைக்குள் வந்து பார்த்தபோது, பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த இளைஞர்கள் முதியவரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் அளித்து ஒப்படைத்தனர்.