மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DOE) சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களின் தொகுப்பை வெளியிட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பின்வரும் சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர் HRAக்கு தகுதி பெற கிடையாது.
வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன..?
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வாடகை வீடுகளில் வசிக்கும் சம்பளம் பெறும் நபர்களுக்கு அத்தகைய தங்குமிடம் தொடர்பான செலவினங்களைச் சந்திப்பதற்காக வழங்கப்படுகிறது. இது X, Y மற்றும் Z என மூன்று வகைகளில் வருகிறது.
X வகை (50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகள்): 7வது CPC இன் படி HRA இன் அனுமதிக்கப்படும் விகிதம் 24% ஆகும்.
Z வகை (5 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதிகள்): 7வது CPC இன் படி HRA இன் அனுமதிக்கப்படும் விகிதம் 8% ஆகும்.
இந்த நிபந்தனைகளின் கீழ் உள்ளவர்களுக்கு HRA கிடையாது:
ஊழியர் மற்றொரு அரசாங்க ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க தங்குமிடத்தைப் பகிர்ந்து கொண்டால் கிடையாது.
மத்திய அரசு,மாநில அரசு,தன்னாட்சி பொது நிறுவனம்,அரை அரசு நிறுவனங்களான முனிசிபாலிட்டி, போர்ட் டிரஸ்ட் போன்றவற்றால் மனைவிக்கு அதே பகுதியில் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தால், வீட்டு வாடகை கொடுப்பனவு கிடையாது.
மத்திய,மாநில அரசு, தன்னாட்சி பொதுத்துறை நிறுவனம் மற்றும் அரை அரசு நிறுவனங்கள் (நகராட்சி, துறைமுக அறக்கட்டளை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி போன்றவை) இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் அவர்களது பெற்றோர்,மகன் அல்லது மகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் வசித்திருந்தால் HRA கிடையாது.