fbpx

மாஸ்…! 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க விண்ணப்பம்…! அமைச்சர் மகேஷ் தகவல்…!

நீலகிரி மாவட்டத்தில் ‘புதியன விரும்பு- 2023’ என்ற தலைப்பில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டு, 80,000 மாணவ, மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி நடந்து வருகிறது என கூறினார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ‘நபார்டு’ நிதியின் கீழ் பள்ளி கட்டடங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.இதில் குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Vignesh

Next Post

பிரபல நடிகர் வித்யார்த்தி 60 வயதில் இரண்டாம் திருமணம்...! இணையத்தில் வெளியான புகைப்படம்...!

Fri May 26 , 2023
பழம்பெரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (60) தொழிலதிபர் ரூபாலி பருவாவை வியாழக்கிழமை கொல்கத்தா கிளப்பில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர்களது முதல் சந்திப்பைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, இது ஒரு நீண்ட கதை என்றும், அதை வேறு நேரத்தில் பகிர்ந்து கொள்வேன் என்றும் கூறினார். மறுபுறம் திருமணம் குறித்து ரூபாலி, கூறுகையில் “நாங்கள் சில காலத்திற்கு முன்பு […]

You May Like