fbpx

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையின் 9-வது தவணை… எப்பொழுது கிடைக்கும்..? வெளியான தகவல்…!

மகளிர் உரிமைத் தொகையின் 9-வது தவணை ரூ.1000, வரும் சனிக்கிழமை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகையின் 9-வது தவணை ரூ.1000, வரும் சனிக்கிழமை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை அவர்களுக்கும் பணம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் 15ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

English Summary

The 9th installment of Rs.1000 of magalir urimai thogai amount will be credited to the bank account on Saturday.

Vignesh

Next Post

மகிழ்ச்சி செய்தி...! இனி இலவசமாக பானை தொழில் செய்ய மண் எடுக்கலாம்...!

Thu Jun 13 , 2024
வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண். வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் […]

You May Like