fbpx

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை..!! குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!! கேரளாவில் பரபரப்பு..!!

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது சிறுமி ஒன்று, கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி காணாமல் போனது. இதுதொடர்பாக அவர், போலீசில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் போலீசார் சிறுமியைத் தேடிவந்தனர்.

சிறுமி காணால் போனதற்கு மறுநாள் (ஜூலை 28) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்புநிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் அச்சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதன்முடிவில் சிறுமியை அவர், வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4ஆம் தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்ததுடன், தண்டனை வருகிற 14ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று அவருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் தினமான இன்று, அந்தக் குழந்தையைக் கொன்ற அசாஃபத்துக்கு போக்சோ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையைப் பலரும் வரவேற்றுள்ளனர். 100 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

Tue Nov 14 , 2023
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடலில் வரும் 16ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்ச்சியின் காரணமாக இன்று அதிகாலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை […]

You May Like