fbpx

55 வயது மூதாட்டி ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொடூர கொலை…..! சென்னையில் நடைபெற்ற பயங்கர சம்பவம்…..!

கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதிலும் பாலியல் ரீதியாக நடைபெறும் குற்றங்களை கணக்கில் கொள்ளவே முடியாது. அந்த அளவிற்கு குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.வயது வித்தியாசம் கூட இல்லாமல் பலர் இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது தான் வெட்க கேடான விஷயமாக உள்ளது. இதனை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த தவறுகள் குறைந்த பாடு இல்லை.

சென்னை அருகே அன்பு (60) என்ற முதியவருக்கு வேளாங்கண்ணி (55) என்ற மனைவி மரியம் லாரன்ஸ் என்ற மக,ன், லான்சி என்ற மகள் உள்ளிட்டோர் இருந்து வந்துள்ளனர். அன்பு முத்தமிழ் நகரில் செயல்பட்டு வரும் ஒரு இரும்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இதில், வேளாங்கண்ணிக்கு அருண் அகஸ்டின் என்ற தம்பி மகன் இருந்துள்ளார். ஆகவே இரு குடும்பத்தாரும் உறவினர்கள் என்பதால் எந்தவித பாகுபாடும் இன்றி பழகி வந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார் அன்பு மதிய உணவை சாப்பிடுவதற்காக அவர் வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது அதன் பிறகு இரவு 8 மணி அளவில் அன்பு பின் மகன் மரியம் லாரன்ஸ் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது அங்கே அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அதாவது தரையில் பலத்த காயத்துடன் தன்னுடைய தாய் வேளாங்கண்ணி உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்தார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரன்ஸ் அண்டை வீட்டாரின் உதவியோடு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி அன்புவின் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வேளாங்கண்ணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்..அதன் பிறகு அன்பு மற்றும் லாரன்ஸ் உள்ளிட்ட இருவரிடமும் அந்த கேமரா காட்சிகளை காண்பித்து விசாரணை நடத்திய போது அன்புவின் வீட்டிற்கு வந்து சென்ற இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்த வேளாங்கண்ணியின் தம்பியின் மகன் அகஸ்டின் அருண் என்பது தெரிய வந்துள்ளது.

பின்பு அகஸ்டின் அருணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி உண்மைகள் வெளியானது.
அதாவது, நேற்று மாலை அகஸ்டின் அருண் மற்றும் அவருடைய நண்பரான சாலமன் உள்ளிட்ட இருவரும் கொடுங்கையூர் பகுதியில் இருக்கின்ற அகஸ்டின் அருவனின் அத்தை வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வேளாங்கண்ணி தனிமையில் இருந்தார். இதனை அருண் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தார். அதன்படி, அருண் தன்னுடைய அத்தை என்று கூட பார்க்காமல் தோள்பட்டையில் கை வைத்து தவறான முறையில் அவரிடம் நடந்து கொண்டதாக தெரிகிறது.

அருணின் நோக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அருணை கண்டபடி திட்டி இது தொடர்பாக உன்னுடைய வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறேன் என்று கண்டபடி காத்தியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அருண் அவருடைய தலை முடியை பிடித்து பலமுறை தரையில் ஓங்கி இடித்துள்ளார். மேலும் அவர் மயக்கம் அடைந்த பிறகு அருகில் இருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து வேளாங்கண்ணியின் கழுத்தில் குத்தி இருக்கிறார்..

இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூர் காவல்துறையினர் அகஸ்டின் அருண் அவருடைய நண்பரான சாலமன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.

Next Post

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..! மூன்று உயிர்கள் பறிபோன பரிதாபம்…..!

Mon Jul 31 , 2023
தற்போதைய இளம் தலைமுறையினர் இடையே செல்போன் மற்றும் செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் மற்றும் செல்ஃபி மோகத்தால் பல்வேறு விபரீதங்களை அனைவரும் சந்தித்து வருகிறார்கள்.பலர் இந்த செல்போன் பயன்பாட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். அதையும் மீறி செல்போனை பறித்தால் உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் அவர்கள் துணிந்து விடுகிறார்கள்.மற்றொருபுறம் பல ஆபத்தான சமயங்களில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டும் என்று இளைய தலைமுறையினர் […]

You May Like