உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பயிற்சி மையத்தின் உயிரியல் ஆசிரியர், மாணவியிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பயிற்சி மைய இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவில் பயிற்சி மையத்திற்குள் மாணவி ஒருவருடன் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீட் பயிற்சி மைய இயக்குனர் சித்திக் சம்மந்தப்பட்ட பயிற்சி ஆசிரியர் மீது கான்பூரில் உள்ள காகதேவ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சிசிடிவி வீடியோவில் வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர், பயிற்சி வகுப்பிற்கு வந்த பெண்ணுடன் பேசும்போது கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் இருந்தது. பின்னர் வகுப்பு நேரத்தில் கழிவறைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளும் காணப்பட்டது.
பயிற்சி மைய இயக்குனரின் புகாரை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய கூடுதல் காவல் ஆணையர் மகேஷ் குமார், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Read more; வெறும் ரூ.13,000 இருந்தால் போதும் ஐபோன் 16 வாங்கலாம்! அம்பானியின் தீபாவளி கிஃப்ட்!