fbpx

வேலூரில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. சந்தேகத்தால் காதலர் செய்த வெறிச்செயல்..

வேலூர் அருகே திருவலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை, மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

வேலூர் அருகே உள்ள கிராமத்தில் சதீஷ் குமார், அதே பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.. இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வரும் நிலையில், அப்பெண் வேறு ஒரு நபரை காதலிப்பதாக சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் திருவலம் பேருந்து நிலையம் அருகே இருந்த உள்ள ஒரு கோயிலில் சதீஷ் குமார் நீண்ட் நேரம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குமார் கையில் வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணின் கழுத்தில் குத்தியுள்ளார்..

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனிடையே இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சதீஷ்குமாரை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Maha

Next Post

மேக வெடிப்பு.. கொட்டி தீர்த்த அதீத கனமழை... வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்...

Wed Jul 6 , 2022
தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. குறிப்பாக அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள சோஜ் நுல்லா என்ற கிராமத்தில் மிகப்பெரிய மேக வெடிப்பு ஏற்பட்டது.. இதனால் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக […]

You May Like