உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஒருவர் கேஷ் ஆன் டெலிவரியில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி கொடுக்க வந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு டெலிவரி ஏஜெண்ட்டை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அருகே உள்ள கால்வாயில் வீசி சென்றுள்ளார். மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் இப்போது அந்த டெலிவரி ஏஜெண்டின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில், லக்னோவை சேர்ந்த கஜனன் என்பவர் பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். கடந்த செப். 23ம் தேதி இந்த ஆர்டரை டெலிவரி செய்த பாரத் சாஹு என்பவர் சென்றுள்ளார். அப்போது மொபைலை ஆர்டர் செய்த கஜானன் மற்றும் அவனது கூட்டாளி ஆகாஷ் என்பவருடன் இணைந்து பாரத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாக தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் ஆகியும் பாரத் வீடு திரும்பாததால் செப்டம்பர் 25ம் தேதி போலீஸ் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். பாரத்தின் மொபைல் போன் டவர் விவரங்களைச் சேகரித்த அவர் கடைசியாகச் சென்ற இடத்தை கண்டுபிடித்தனர். போலீசார் கஜனனின் எண்ணை டிராக் செய்துள்ளனர். இருப்பினும், அதற்குள் கஜனன் உஷாராகி தப்பிவிட்டார். கஜனனின் நண்பர் ஆகாஷை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
Read more ; பெண்களே உஷார்.. இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம்..!! அலட்சியப்படுத்தாதீங்க..