ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக மாறியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய போதும், பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
அதன்படி, கடன் வட்டி விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதுவரை 9.40% ஆக இருந்த ஆர்எல்எல்ஆர் கடன்களுக்கான வட்டி 9.25 % ஆக குறையும். மேலும், இந்த அறிவிப்பு கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.