fbpx

இது புதுசா இருக்குங்க.. பெண்ணின் தலை மேல் CCTV மாட்டிய தந்தை..!! காரணம் கேட்டா ஷாக் தான்..

சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன. இந்த நிலையில் தான், பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது..

பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது. தன்னுடைய மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம். இந்த கேமராவை தனது செல்போன் மூலம் கண்காணித்து வருகிறார். இதை அப்பகுதி மக்களே ஆச்சரியத்துடன் பார்கின்றனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்..

இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்று செய்தியாளர் கேட்டிருக்கிறார்.. அதற்கு அந்த பெண், “என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார்.. அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார். இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே,, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார். இந்த செயல்பாடு சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.. பெண் அளித்த இந்த பேட்டிதான், இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.

Read more ; பரபரப்பு.. வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள்..!! – பயணிகள் அதிர்ச்சி

English Summary

A father in Pakistan has a CCTV camera attached to his daughter’s head to monitor her wherever she goes.

Next Post

29 பதக்கங்கள்.. 18-வது இடத்தில் இந்தியா..!! பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் பதக்கம் வென்றவர்களின் முழு விவரம் இதோ..

Sun Sep 8 , 2024
Paris Paralympics 2024: Complete List Of India's 29 Medal Winners

You May Like