மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்., மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி இன்று புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுவை அரசின் சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின் பேரில் இன்று மொகரம் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வருகிற 20-ம் தேதி பணிநாளாக ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.