Annamalai: பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு என, அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி விட்டு, அரசு செலவுகளை மிச்சப்படுத்தியுள்ளது என்று கூறுவது நகைச்சுவை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.,வின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக, நிதித்துறையை இழந்த அமைச்சர், தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பற்றி பேசுகிறார். அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான, ‘டெண்டர்’ ஆணை ஏன் கேரளா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசின், ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் ஒரு பகுதியை கொண்ட, 1,000 கோடி ரூபாய் டெண்டரில், தமிழக அரசின், ‘எல்காட்’ நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதற்கு, அமைச்சர் தியாகராஜன் பதில் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Readmore: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை இடைநீக்கம்!… ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்காததால் அதிரடி!