பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நயன்தாரா தான். சமீபத்தில் கூட நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு முன் நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபுதேவா உடன் காதல் : 2011ஆம் ஆண்டு நடன இயக்குநர் பிரபு தேவாவுடன், நயன்தாரா காதலித்து வந்தார். அவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பிரபு தேவாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்தது. நயன்தாராவைப் பார்த்தால் காலால் எட்டி உதைப்பேன் என பிரபு தேவாவின் மனைவி பேசியது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்தனர்.
நயன்தாரா – சிம்பு லிப் லாக் போட்டோ : நடிகை நயன்தாராவும், நடிகர் சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து வந்தனர். அப்படத்திற்கு பின் இருவரும் ஜோடியாக பட விழாக்களிலும் கலந்துகொண்டனர். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டது இருவரின் லிப் லாக் புகைப்படம் தான். அந்த புகைப்படம் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. அதன்பின் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
கோவிலுக்குள் காலணி : 2022 ஆம் ஆண்டில் நயன், விக்கி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் திருமலை கோயிலுக்குச் சென்றபோது சர்ச்சையைக் கிளப்பினார்கள். நயன்தாரா வீதிகளை மீறி காலணி அணிந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாடகை தாய் : திருமணமான நான்கு மாதங்களில், நயன், விக்கி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் உயிர் மற்றும் உலகம் என்ற இரண்டு குழந்தைகளின் பெற்றோரானதாக அறிவித்தனர். இந்த விவகாரம் அப்போது விஷ்பரூபம் எடுத்தது..
அல்லு அர்ஜூனை இன்சல்ட் செய்த நயன் : நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்திற்காக விருது வாங்க மேடையேறிய போது, அங்கு விருது வழங்க வந்த அல்லு அர்ஜுனிடம் இருந்து விருதை வாங்க மறுத்து, அந்த விருதை விக்னேஷ் சிவன் கையால் வாங்குவேன் என கூறிவிட்டார். மேடையில் அல்லு அர்ஜுனை நயன்தாரா இன்சல்ட் பண்ணிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடந்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தனுஷ் நயன் மோதல் : நயந்தாராவின் திருமண ஆவணப்படம் பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படம் வெளியானது. அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது. இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது..
Read more ; தொடர்ந்து கண்ணாடி அணிவதால் தழும்புகள் ஏற்படுகிறதா..? அதை எளிமையாக நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!