fbpx

தேனி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து……! ஒருவர் பலி ஆறு பேரின் நிலை என்ன…..?

அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து. நீண்ட நேரம் போராடியும் ஓட்டுனரை காப்பாற்ற முடியாத சோகம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு என்ற பகுதியில், அந்த மாவட்டத்தின் எல்லை சோதனை சாவடி அமைந்திருக்கிறது. இந்த சோதனை சாவடியில் வாகனங்கள் நிர்வாக செல்வதற்காக போடப்பட்டு இருக்கும் தடுப்புகளை தாண்டி, சென்ற மதுரையிலிருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த லாரியின் மீது நேருக்கு, நேர் பயங்கரமாக மோதி விபத்து உண்டானது.

இந்த மிகப்பெரிய விபத்தில் பேருந்தும், லாரியும் ஒன்றாக மோதியதால் லாரியின் முன் பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. லாரி ஓட்டுநர் கடுமையான இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி தவித்தார். இதை கண்ட சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியதன் காரணமாக, லாரி ஓட்டுனரை வெகு நேரம் போராடிய பின்னரும் உயிருடன் மீட்க முடியாத நிலையில், சடலமாகவே அவர் மீட்கப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக, தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன், விரைந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இடிபாடுகளுக்கு நடுவே, சிக்கி பரிதாபமாக உயிரிழந்த, லாரி ஓட்டுனரின், உடலை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அத்துடன், இந்த விபத்து தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில், உயிரிழந்த ஓட்டுனரின் பெயர் அருண்குமார் (30) என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த விபத்தில், லாரியின் பின்பக்கமாக வந்து கொண்டு இருந்த கார்கள், அடுத்தடுத்து மோதியதன் காரணமாக, காரில் பயணம் செய்த இரண்டு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் உட்பட, ஆறு பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பிளஸ் 2 மாணவனை வீடு புகுந்து வெட்டிய சக மாணவர்கள்..!! சாதி ரீதியான மோதல்..? விசாரணையில் அதிர்ச்சி..!!

Fri Aug 11 , 2023
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முனியாண்டி என்பவரது மகன் (17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் (14) ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர் கடந்த ஒரு வாரமாகவே பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளர். பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டனர். இதையடுத்து, பெற்றோரும் மாணவரை பள்ளி […]

You May Like