fbpx

55 கி.மீ வேகத்தில் காற்று… இன்று வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…!

புயலுக்கு நடுவே பூக்களாய் மலர்ந்த 270 குழந்தைகள்..!! மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. தவிர, வடக்கு ஆந்திரா, அதை ஒட்டியகடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வரும் 8ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

A low pressure area forming over the Bay of Bengal today

Vignesh

Next Post

ரயில் பயணிகளே!. தண்டவாளத்தில் நிறுவப்பட்ட C/FA, W/L போர்டுகளின் அர்த்தம் என்ன தெரியுமா!.

Thu Sep 5 , 2024
Railway News- Do you know the meaning of C/FA, W/L boards installed along the track, let's know

You May Like