fbpx

மனைவியை 41 முறை ஸ்க்ரூ ட்ரைவரால் கொடூரமாக குத்திய கணவன்! சுற்றுலா சென்ற இடத்தில் வெறிச்செயல்.!

மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயது மற்றும் 26 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் கடந்த நவம்பர் 11ம் தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் இஸ்தான்புல் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கணவர் அருகிலிருந்த ஸ்க்ரு டிரைவரை எடுத்து மனைவியை 41 முறை கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கிறார்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஹோட்டல் ஊழியர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரத்தக்கரை படிந்த ஆடைகளுடன் ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற கணவரை ஹோட்டல் ஊழியர்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாகவும் அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் துருக்கி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கியின் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Kathir

Next Post

விவாசியிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து…!

Fri Nov 17 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் […]

You May Like