fbpx

வீடியோ: நான் இருக்கும் போது அத்தை கேக்குதோ.? இளைஞரை கட்டி வைத்து விளக்குமாறால் அடித்த மனைவி.! அதிர்ச்சி சம்பவம்.!

பீகார் மாநிலத்தில் அத்தை என்று கூறி ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த வாலிபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பீகார் மாநிலம் ஜம்முய் மாவட்டம் லட்சுமிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுசில் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது அத்தை என்று கூறி ஒரு பெண்ணிடம் ரகசிய உறவிலிருந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு அந்தப் பெண்ணும் சுசில் குமாரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் இது தொடர்பாக சுசில்குமாரின் மனைவிக்கும் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சுசில் குமாரை மரத்தில் கட்டி வைத்து விளக்குமாறால் அடித்துக் கொடுமைப்படுத்தினார். மேலும் அவர் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை அவரின் மனைவி மற்றும் உறவினர்களிடமிருந்து மீட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Next Post

Scholarship: 30,000 மாணவர்களுக்குகல்வி உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!

Wed Dec 20 , 2023
இளம் சாதனையாளர்களுக்கான, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும், 30 ஆயிரம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு, 2023-24ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கப்படுகிறது. பெற்றோரது வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சம். வரும், 31க்குள் விண்ணப்பிக்க […]

You May Like