சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வின்போது ஹோம் தியேட்டர் வெடிகுண்டு வெடித்ததில் மணமகன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சார்ந்த ஹேமந்த்ர மெராவி. என்பவருக்கும் அஞ்சனா கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற திருமணத்திற்கு ஏராளமானவர்கள் வருகை புரிந்தனர். திருமண வீட்டிற்கு வந்தவர்கள் பல்வேறு விளைவு உயர்ந்த பரிசு பொருட்களை தம்பதிகளுக்கு பரிசளித்தனர். இந்நிலையில் திருமண சடங்கின் ஒரு பகுதியாக மணப்பெண் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமந்த்ர மெராவி தனக்கு வந்த பரிசு பொருட்களை எடுத்து சோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பரிசாக வந்திருந்த ஒரு ஹோம் தியேட்டர் பரிசோதித்துப் பார்க்க அதன் ப்ளக்கை மின்சாரத்தோடு இணைத்த போது டமார் என்று சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது ஹோம் தியேட்டர். இந்த விபத்தில் புது மாப்பிள்ளயான ஹேமந்த்ர மெராவி பரிதாபமாக உடல் சிதறி பலியானார். மேலும் அவரது சகோதரர் ராஜ்குமார் மற்றும் ராஜ்குமாரின் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஆறு பேர் விபத்தில் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மெராவியின் சகோதரர் ராஜ்குமார், மரணம் அடைந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்த காவல்துறையினர் திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வெடிகுண்டு கொண்டு வந்த நபர் யார் என்று உண்மையை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் முன்னால் காதலரான சர்ச்சு மார்க்கம் என்பவர் தான் இந்த வெடிகுண்டு பார்சலை திருமண மண்டபத்தில் வைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் வேலை செய்பவர் ஆன மார்க்கம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.