fbpx

“நடத்தையில் சந்தேகம்……” கள்ளக் காதலியை கொன்று 2 குழந்தைகளை கொன்று எரித்துவிட்டு ஓடிய கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்த கொடூர கொலைகாரனை காவல்துறை கைது செய்து இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் வைபவ் வாக்மாரே 30 வயதான இவர் புனேயில் தங்கியிருந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான அம்ரபல்லி (25)  என்பவருக்கும் திருமணத்திற்கு முன்பிருந்தே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் தொடர்ந்திருக்கிறது.

அம்ரபல்லி புனே கொண்ட்வா பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனது காதலிக்கு வேறு ஆண்களுடனும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு வந்தார் வைபவ். இதன் காரணமாக இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு மீண்டும் இது தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்திலிருந்த வைபவ் அம்ரபல்லியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைப் பார்த்த அவரது இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்திருக்கிறார் வைபவ். பின்னர் இறந்த உடல்களை வீட்டிற்கு அருகிலிருந்த சிறிய ஷெட்டுக்கு எடுத்துச் சென்று விறகு மற்றும் பெட் சீட் ஆகியவற்றை வைத்து மூன்று உடல்களையும் எரித்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார். மறுநாள் காலை இவர்கள் மூவரையும் வெளியே காணாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது செட்டிற்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையை சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய வைபவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Rupa

Next Post

8.2% வட்டி.. ரூ.1 லட்சம் வரை வட்டி கிடைக்கும்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்..

Thu Apr 6 , 2023
சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக மக்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். […]

You May Like