கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபம் நபர்களுக்கு கொரோனா அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சுவை இல்லாமை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
மருத்துவமனைகளில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை. ஆரம்பக் கட்ட அறிகுறிகள் தென்பட்டாலும் அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு அறிகுறிகள் அதிகரித்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை தேவையில்லை.
மேலும், பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி தனிமைப்படுத்திக் கொள்ளலாம். பொது மக்கள் தேவையில்லாமல் கொரோனா பரிசோதனை மருத்துவமனைகளிலும், பரிசோதனை நிலையங்களிலும் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.