fbpx

திருச்சி: “தம்பியின் காதலியிடம் பேசியதால்..”! கொத்தனார் அடித்துக் கொலை.! 4 பேர் கைது.!

திருச்சி மாவட்டத்தில் தனது தம்பியின் காதலியுடன் பேசியதால், கூலித்தொழிலாளி ஒருவரை அடித்துக் கொன்ற அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள கலிங்கத்துப்பட்டியில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு ஜெகதீசன் (27) மற்றும் சதீஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். ஜெகதீசனின் தம்பி சதீஷ் கண்தீனதயாள் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.

நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (43) என்பவர் அந்தப் பெண்ணின் தாய் எங்கே என்று அந்தப் பெண்ணிடம் கேட்டுள்ளார். அவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.

இதனை அறிந்த ஜெகதீசன், தனது தம்பி சதீஷின் காதலியிடம் எவ்வாறு பேசலாம் என்று கூறி நாகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெகதீசன், தன்னுடன் அழைத்து சென்ற நண்பர்களான சிலம்பரசன் (19), தீபக் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரின் துணையுடன் நாகராஜனை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த நாகராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகராஜன் சகோதரி புவனேஸ்வரி மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை ஆய்வாளர் சுப்ரமணியன், குற்ற செயலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

இதுகூட தெரியாமல் கட்சி தொடங்குவதா..? விளக்கம் அளித்தால் விஜய்க்கு ரூ.10 கோடி பரிசு..!! அறிவித்தது யார் தெரியுமா..?

Sat Feb 3 , 2024
“நாளைய வாக்காளர்கள் நீங்க. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க. உங்க பெற்றோர் கிட்டயும் இத சொல்லுங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படிங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட நடிகர் விஜய், நேற்று அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியையும் தொடங்கினார். தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் தனது நிலைபாடு என்ன? என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும், அம்பேத்கர், பெரியார், காமராஜரை குறிப்பிட்டு, […]

You May Like