பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது..
மத்திய பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மாகாணத்தின் முக்கிய தீவான மஸ்பேட்டில் உள்ள உசன் நகராட்சியில் உள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது.. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.. மேலும் சேத விவரங்கள் அல்லது உயிரிழப்புகள் எந்த தகவலும் வெளியாகவில்லை..
அந்த மாகாணத்தில் “தொடர்ச்சியான நில அதிர்வுகள் உணரப்படுவதால்” மாஸ்பேட் கல்வித் துறை இன்று விடுமுறை அறிவித்துள்ளது.. இந்த நிலநடுக்கத்தால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.. ஆனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை..
நிலநடுக்கங்கள் என்பது பிலிப்பைன்ஸில் நடக்கும் பொதுவான நிகழ்வாகும்.. பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” என்று அழைக்கப்படும் எரிமலை வளைய பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.. கடந்த அக்டோபர் மாதம் வடக்கு பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தது.. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் மலைப்பகுதியான அப்ராவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். கடந்த 10 நாட்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நான்காவது நாடு பிலிப்பைன்ஸ். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்தில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிப்ரவரி 6-ம் தேதி , 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கியது.. இதில், 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..