fbpx

வேலை செய்யாத சிசிடிவி கேமரா! மர்மமான முறையில் இறந்து கிடந்த இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்!

மேற்குவங்க மாநிலத்தில் ஒரு வீட்டில் கணவன் மனைவி உட்பட இரண்டு குழந்தைகள் மர்மமான முறையிலிறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் தொழில் நகரமான துர்காப்பூரை சேர்ந்தவர் அமித் மொந்தல் இவரது மனைவி ரூபா. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் இருந்தனர். நேற்று வெகு நேரமாகியும் அமித் வீட்டில் இருந்து யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் அமைத்து வீட்டிற்கு வந்து காவல்துறையினர் சோதனை செய்தபோது அமீத் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மெத்தையில் பிணமாக கிடந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களது உடலை கைப்பற்றிய காவல்துறையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அமீத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றினர் .

அமித் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பரபரப்பாக புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக புகாரளித்திருக்கும் அமித் மனைவி ரூபாவின் உறவினர்
சுதிப்தா கோஷ் “இது சொத்துக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை” என தெரிவித்துள்ளார். அமித்தின் தாய் தனது மகன் மற்றும் மருமகளை விட அவரது சகோதரருக்கு தான் சொத்துக்கள் கிடைக்க வேண்டும் என முன்னுரிமை அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார். எனது மைத்துனர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறப்பிற்கு அவர்கள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். வீட்டிலிருக்கும் சிசிடிவி கேமராவை பாலித்தீன் பைக் கொண்டு கவர் செய்துள்ளனர். மேலும் வெளிப்புறத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என தெரிவித்த அமித்தின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறக்கும்போது தனது சொத்துக்களை மகளுக்கும் அவரது மனைவிக்கும் விட்டுச் சென்றார். ஆனால் அமித்தின் தாயார் அந்த சொத்துக்கள் அவரது சகோதரருக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரு குடும்பத்திற்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது என தெரிவித்திருக்கிறார். இது சொத்துக்காக நடத்தப்பட்ட கொலையா அல்லது குடும்பத் தகராறில் ஏற்பட்ட அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பற்றி காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Rupa

Next Post

2 லட்சம் ஆட்டோக்கள் ஓடவில்லை..!! பொதுமக்கள் கடும் பாதிப்பு..!! பரபரக்கும் பெங்களூரு..!!

Mon Mar 20 , 2023
பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெருநகரங்களில் என்னதான் மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டாலும், ஆட்டோ சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக தான் உள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆட்டோ தான் சரியான தேர்வாக உள்ளது. ஆட்டோ ஓட்டுவதை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஆட்டோக்களுக்கு போட்டியாக […]

You May Like