fbpx

தலைமுடியை வெட்ட சொன்னதால் தவறான முடிவெடுத்த பள்ளி மாணவன்..! ஆசிரியர் கண்டித்ததால் அரங்கேறிய விபரீதம்..!

ஆசிரியர், தலைமுடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வரச் சொன்னதால், மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாச்சலத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மாணவன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வந்த மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா, தலையில் முடி அதிகமாக இருப்பதால், அதனை வெட்டி விட்டு பள்ளிக்கு வருமாறு அறிவுரை கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த மாணவன் மறுப்பு தெரிவிக்கவே, பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

தலைமுடியை வெட்ட சொன்னதால் தவறான முடிவெடுத்த பள்ளி மாணவன்..! ஆசிரியர் கண்டித்ததால் அரங்கேறிய விபரீதம்..!

இதனால், மனவேதனை அடைந்த மாணவன், பள்ளியில் இருந்து வெளியேறி, நேராக கடைக்குச் சென்று பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். பின்னர், மதிய வேளையில் பள்ளிக்கு வந்த மாணவன், சக மாணவரிடம் பூச்சி மருந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். பிறகு இந்த தகவல் ஆசிரியர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாணவனை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

வொர்க் ப்ரம் ஹோம்.. புதிய நெறிமுறைகளை வெளியிட்டது வர்த்தக அமைச்சகம்..!

Wed Jul 20 , 2022
வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஒரு வருட காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம். அதுபோலவே 50% ஊழியர்களுக்கு இந்த வசதியை வழங்கலாம், என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்திட்டங்கள் 2006-ல் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி புதிய […]

You May Like