fbpx

9-ம் வகுப்பில் இருந்து பலமுறை பாலியல் தொந்தரவு செய்த சமூக சேவகர்.. மாணவியின் உருக்கமான பதிவு..

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்..

‘ பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் அப்பெண் பல அதிர்ச்சி தகவல்களை அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்திருப்பதை உணர்ந்து இப்போது பேச முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்..

மேலும் “கேரள மாநிலம் கோழிக்கோடு குட்டியாடியை பூர்வீகமாகக் கொண்ட குரியன் ஜோஸ் என்ற மனநல சமூக சேவையாளரால் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன், இப்போது செலாவூரில் நிரந்தரமாக வசிக்கிறேன். நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது அவர் எங்கள் பள்ளியில் சேர்ந்தார். விரைவில் அவர் அனைவரின் விருப்பமான ஆசிரியராகி நம்பிக்கையை பெற்றார். பள்ளியில் பல மாணவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டனர்..

நான் அவரை கடவுளை போல் நினைத்து பிரச்சனைகளை அவருடன் பகிர்ந்துகொண்டேன்.அவர் என் தந்தை போன்றவர் என்று என்னிடம் கூறினார். உத்வேகம் அளிக்கும் வகையில் அவர் பேசினார்.. .ஆனால் அது 9வது வயதில் தொடங்கியது. யாரும் இல்லாதபோதெல்லாம் அவர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார். அதுதான் முதல்முறையாக என் வாழ்க்கையில் இவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். ஆனால் நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் கடினமாக இருந்தது. வாழ்க்கையில் நான் மிகவும் நம்பியவர் எனக்கு இப்படி செய்கிறார் என்று நானே நினைத்துக்கொண்டேன். நாட்கள் செல்ல செல்ல அந்த துன்புறுத்தல் மேலும் மோசமாகியது.அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்தார்.பின்னர் என்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு வந்து, கோழிக்கோடு செயின்ட் ஜோசப் தேவகிரி கல்லூரியில் சமூகப் பணித் துறையில் பணிபுரிவதால், சமூக வலைதளங்களில் இதை சொல்கிறேன்.. அவருடைய சுரண்டலுக்கு அங்குள்ள மாணவர்கள் இன்னும் பலியாவதற்கு வாய்ப்புள்ளது. மாணவிகளின் நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதுதான் முறையாகும்,” என்று அப்பெண் குறிப்பிட்டுள்ளார்..

பின்னர் தனக்கு காம்ப்ளக்ஸ் போஸ்ட் ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் என்ற மனநலப் பிரச்சனை (PTSD) இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.. மேலும் அந்த பதிவில், தனது அனுபவத்தை கல்லூரிக்கு எழுதியதாக கூறியுள்ளார். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் கூடுதல் சான்றுகளை அளிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. “ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணை சமூகம் நம்புவதற்கு எவ்வளவு ஆதாரங்களை உருவாக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்..

“இந்த நபருக்கு எதிராக நான் எப்போதாவது ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறேனா என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். உலகில், பாதுகாப்பான இடமின்றி ஒரு பெண் அதைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். பாதிக்கப்பட்டவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்ந்து போராடுகிறார்கள், அதே நேரத்தில் பாலியல் தொல்லையில் ஈடுபவர்கள் ஒரு புதிய பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து வாழ்க்கையை நகர்த்துகிறார்,” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

“ மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனத்தை மதிப்பதில்லை.. ” முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

Sat Jul 2 , 2022
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கரூர் சென்றுள்ளார்.. இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது, கரூர் மாவட்டத்திற்கு ஜவுளி காட்சி அரங்கம் அமைக்கப்படும் என்றும், திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like