சேலம், அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக ஆடி-18 மற்றும் வல்வில் ஒரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சேலம், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வருகின்ற 03.08.2022 அன்று ஆடி-18 மற்றும் வல்வில் ஒரி விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக சிறப்பு பேருந்துகள் 02.08.2022 முதல் 03.08.2022 வரை சேலத்திலிருந்து மேட்டூர், பவானி, கந்தாசிரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும், நாமக்கல்லிலிருந்து கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவில், வேலூர் – கொடுமுடி, மோகனூர் பகுதிகளுக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கொடுமுடி, பவானி பகுதிகளுக்கும், சங்ககிரியிலிருந்து பவானிக்கு இயக்கப்படும்.
மேலும், இராசிபுரத்திலிருந்து காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும், காரவள்ளியிலிருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கும், எடப்பாடியிலிருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் பகுதிகளுக்கும், தாரமங்கலத்திலிருந்து மேட்டூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 02.08.2022 முதல் 03.08.2022 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி சேலம், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.