fbpx

குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு குறை தீர்க்கும் சிறப்பு முகாம்…!

குடும்ப ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மத்திய அரசு நடத்த உள்ளது.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறையின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்ப ஓய்வூதிய குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரத்தை பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். ஒரு மாத காலம் நீடித்த இந்த சிறப்பு முகாம், மூன்றாவது வார இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 73 சதவீதத்தை தாண்டியுள்ளது.

மொத்தமுள்ள 1891 குடும்ப ஓய்வூதிய வழக்குகளில், 1,375 குடும்ப ஓய்வூதிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.46 அமைச்சகங்கள்/துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பயனளித்துள்ளன. சில முக்கிய நேர்வுகளில் குடும்ப ஓய்வூதிய குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வலைதளமான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPENGRAMS) மூலம் குடும்ப ஓய்வூதிய குறைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

A special camp for redressal of family pensioners will be held.

Vignesh

Next Post

23-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர்...! டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்...!

Sun Jul 21 , 2024
All party meeting in Delhi today at 11 am

You May Like